Saturday, August 20, 2011

Taught of the day

ஒரு மனிதனாய் உங்களால் என்ன செய்ய இயலாதோ அதை நீங்கள் செய்யாவிட்டால் அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் உங்களால் என்ன செய்ய இயலுமோ அதை செய்யாவிட்டால் நீங்கள் ஓர் அவலம்.


நீங்கள் புத்திசாலித்தனம் என அழைப்பதும் படைத்தவன் என அழைப்பதும் வெவ்வேறானதல்ல. படைத்தவன் தூய்மையான புத்திசாலித்தனமாகவே இருக்கிறான் - தர்க்க அறிவை மீறிய புத்திசாலித்தனம்.

குழந்தைகளை பெறுதல் என்பது இனப்பெருக்கம் செய்வது பற்றி அல்ல, நீங்கள் அடுத்த தலைமுறை மக்களை உருவாக்குகிறீர்கள். இது ஒர் அளப்பரிய பொறுப்பு.

ஆன்மீகம் என்றாலே பல பிறவிகள் தேவைப்படும் என மக்கள் ஏன் கருதி வந்தனர் என்றால் அவர்கள் எப்போதும் முயற்சிப்பதும் கைவிடுதாயும் இருப்பதால் தான்.

அர்ப்பணை உணர்வு இல்லாமல் ஒரு செயல் செய்யும் மனிதர், தன் வாழ்க்கையில் எந்த ஒரு மதிப்பான செயலையும் ஒருபோதும் செய்ததில்லை.

ஏன் மனித வாழ்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றால் மனிதர் மட்டுமே ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்து விழிப்புடன் செயல்பட முடியும்.

எல்லா நம்பிக்கைகளும் எங்கோ ஓர் இடத்தில் சுக்குநூறாகும், உண்மை மட்டுமே நிலைத்திருக்கும்.

எல்லா நம்பிக்கைகளும் எங்கோ ஓர் இடத்தில் சுக்குநூறாகும், உண்மை மட்டுமே நிலைத்திருக்கும்.

உங்கள் வாழ்வை ஒர் உயர் பரிமாணத்தை அடைய படிகட்டாய் பயன்படுத்தினீர்கள் என்றால் நீங்கள் யோகாவில் உள்ளீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்வை உங்களை பிணைத்துக் கொள்ளவும் துன்பப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் அது கர்மா.
--

எல்லாம் அவன் செயல் ...
என்றும் அன்புடன் ,
கார்த்தி.......(உண்மை விரும்பி )

No comments:

Post a Comment